×

ஆட்டோ மீது கார் மோதி விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் சன்சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் அமீத் (47). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றுமுன்தினம் அமீத் தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மணவாளநகரிலிருந்து – ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, மணவாளநகர் சாலையோரமாக ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் அமீத் மற்றும் அந்த ஆட்டோவில் பயணம் செய்த திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரிசில்லா, சிபினா, ராஜநந்தினி ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ மீது கார் மோதி விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ameet ,Kammavarpalayam Suncity ,Manavalanagar ,Sriperumbudur ,Manavalanagar road ,
× RELATED பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி