வாலிபர் மீது தாக்குதல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன், கடந்த 9ம் தேதி கூறைநாடு அருணா பெட்ரோல் பங்க் பகுதியில் சீருடை அணியாமல் டூ வீலரில் சென்றார். அப்போது, முன்னால் டூவீலரில் சென்ற சரண்ராஜ் (31) என்பவர் இடதுபுறமாக ஓரங்கட்டியபோது இன்ஸ்பெக்டர் குணசேகரன் தடுமாற்றம் அடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், சரண்ராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

The post வாலிபர் மீது தாக்குதல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: