லஞ்சப்பணம் ரூ.11.70 லட்சம் பறிமுதல் ஊட்டி நகராட்சி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு

ஊட்டி: ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். விதிமுறை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணம் பெற்று அனுமதி வழங்குவது, கான்ட்ராக்டர்களிடம் லஞ்சம் வசூலிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.  இவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஊட்டியில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார். அப்போது, அவர் காரில் லஞ்ச பணம் கொண்டு செல்வதாக வந்த தகவலையடுத்து ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.11.70 லட்சத்தை கைப்பற்றினர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை பணியில் இருந்து தற்காலிகமாக விடுவித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

The post லஞ்சப்பணம் ரூ.11.70 லட்சம் பறிமுதல் ஊட்டி நகராட்சி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: