×

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி 2 நாட்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து 2.5கிமீ தொலைவில், ரூ.535 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய ரயில் பாலம் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கடலில் 101 தூண்களுடன் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் கூடிய விரையில் திறக்கப்பட்ட உள்ள நிலையில், பாம்பன் பாலம் பாதுகாப்பு குறித்து தெற்கு ரயில்வே ஆணையர் செளத்ரி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 தினங்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாளை மண்டபம் – பாம்பன் பாலம் இடையே உள்ள ரயில்வே வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

நாளை மறுநாள் புதிய பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டு தூக்கு மேம்பாலத்தையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாளை மறுநாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே ஆணையர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பாம்பன் பாலம் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி 2 நாட்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Safety Commissioner ,Chowdhury ,Pamban ,Rameswaram ,Ministry of Railways ,Rameswaram Pampan Bridge ,Safety Commissioner Chowdhury ,Dinakaran ,
× RELATED ரயில் சேவையில் மாற்றம்.....