×

திருவாரூரில் ரோடு ரோலர் சக்கரம் கழன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாவலூர் நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நாகப்பட்டினம் பைபாஸ் சாலையிலிருந்து ரோடு ரோலர் வந்துகொண்டிருந்தது.

அப்போது புதிய ரயில் நிலையம் அருகில் ரோடு ரோலர் வரும்போது அதன் முன்பக்க சக்கரம் கலந்து உருண்டோடியது. அப்போது எதிரே வந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டில் மீது ரோடு ரோலரின் சக்கரம் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோடு ரோலரின் சக்கரம் பேருந்தின் மீது மோதியதில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூரில் ரோடு ரோலர் சக்கரம் கழன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Nawalur ,Nagapattinam Bypass Road ,Thiruvarur New Railway Station ,
× RELATED பல மருத்துவகுணம், நோய் எதிர்ப்பு சக்தி...