×

கேரளாவில் எலி விஷம் தடவிய தேங்காய் துண்டை சாப்பிட்ட 15 வயது சிறுமி பரிதாப பலி

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வீட்டில் எலியை பிடிப்பதற்காக விஷம் தடவி வைத்திருந்த தேங்காய் துண்டை தவறுதலாக எடுத்து சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தகழி பகுதியை சேர்ந்தவர் ஹரிதாசன். அவரது மகள் மணிக்குட்டி (15). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். ஹரிதாசின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தது.

இதனால் அதை பிடிப்பதற்காக அவரது மனைவி தேங்காய் துண்டில் எலி விஷத்தை தடவி சமையலறையில் வைத்திருந்தார்.இந்தநிலையில் மணிக்குட்டி நேற்று டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. சமையலறைக்கு சென்றபோது அங்கிருந்த தேங்காய் துண்டை பார்த்ததும் அதில் விஷம் இருப்பது தெரியாமல் அதை எடுத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மணிக்குட்டி மயங்கி விழுந்தார். வீட்டுக்கு வந்த ஹரிதாஸ் மணிக்குட்டி மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நிலைமை மோசமானதால் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் எலி விஷம் தடவிய தேங்காய் துண்டை சாப்பிட்ட 15 வயது சிறுமி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Alappuzha, Kerala ,
× RELATED கேரளாவில் பங்குதாரருடன் தகாத உறவு என...