×

உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழப்பு..!!

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசஉத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழந்தனர். வீடுகளுக்கு பூசுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளிய போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சரிவில் சிக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், மண்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மண்சரிவில் சிக்கி இருக்கும் மற்ற பெண்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி பெண்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kasganj ,Uttar Pradesh ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச்...