×

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை: பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.50 லட்சம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக 2 தினங்களுக்கு முன்பு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார். ஃபைசான் என்பவரின் செல்போனை பயன்படுத்தி சத்தீஸ்கரில் இருந்து மிரட்டல் விடுத்திருந்தார். தனது செல்போன் காணாமல் போனதாக ஃபைசான் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

The post ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Khan ,Mumbai ,Chhattisgarh ,Faizan ,
× RELATED முஃபாசாவில் இணைந்த ஷாருக்கான்