×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் வழங்கினார்

திருச்சி, நவ.12: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஷகீல்அகமத், மாநில பொருளாளர் அர்சுணன், மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைசெயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாக குழு சுந்தரம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா நல வாரியத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் பதிவுபெற்ற தையல் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், 55 வயது பூர்த்தி அடைந்த தையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.5ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தையல் தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு இயற்கை மரணம் அல்லது விபத்து ஏற்பட்டால் நலவாரியம் மூலம் அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வழங்கும் நலதிட்டங்கள், கல்வி உதவி தொகை இரட்டிப்பாக வழங்க வேண்டும்.

தையல் தொழிலாளருக்கு வழங்கும் இலவச தையல் மெஷின் நலவாரியத்தில் உள்ள நலிவுற்ற பெண்களுக்கு மாவட்டந்தோறும் வழங்க வேண்டும், தையல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வது தாமதமாகிறது, எனவே அவர்கள் பதிவு செய்யும் இனைதளத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தையல் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : SEWING WORKERS ,Trichy ,Trichy Collector's Office ,Tamil Nadu Sewing Workers' Progress Association ,Ganesan ,Secretary of State ,Shakeel Ahmed ,State Treasurer ,Dinakaran ,
× RELATED துற்றைய கல்லூரி மாணவர், இளைஞர்களுக்கு...