×

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு; மறுஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை:கடந்த 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைய மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என்று கூறி ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்து இருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

The post ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு; மறுஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : STERLITE PLANT VERDICT ,SUPREME COURT ,Chennai ,Tamil Nadu government ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...