×

பத்தனம்திட்டாவில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: தமிழக வாலிபருக்கு மரண தண்டனை

திருவனந்தபுரம்: தமிழகத்தின் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (26). இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் ஒரு மகள் இருந்தார். இவர்கள் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள கும்பழா என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2021 ஏப்ரல் 5ம் தேதி 5 வயது சிறுமி உடலில் 61 வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் ஜான், அலெக்ஸ் பாண்டியனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post பத்தனம்திட்டாவில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: தமிழக வாலிபருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.

Tags : Pathanamthita ,Thiruvananthapuram ,Alex Pandian ,Rajapalayam ,Tamil Nadu ,Pathanamthita, Kerala ,
× RELATED பலாத்கார வழக்கில் மலையாள நடிகர்...