×

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; மதுக்கடை, பார்களில் கட்டாய வயது சோதனை: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் கலால் கொள்கையின்படி, குறிப்பிட்ட வயதுக்கு குறைவானவர்கள் மது அருந்துவது, வைத்திருப்பது சட்டவிரோதமானது என சட்டம் உள்ளது. ஆனால் மது விற்பனை இடங்களிலும், பார்களிலும் வயது சரிபார்ப்பு சோதனைகள் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை.

அதிலும் தற்போது ஆன்லைன் மது வாங்கும் வசதிகள் வந்து விட்டதால் இளம் பருவத்தினர் எளிதில் மது வாங்கும் நிலை உள்ளது. எனவே, மது விற்பனை இடங்கள் மற்றும் பார்கள் உள்ளிட்டவற்றில் வயது சரிபார்ப்பு சோதனை நடத்த கடுமையான விதிமுறை மற்றும் வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். சிறுவர்களுக்கு மது விற்றால், குடிக்க அனுமதித்தால் ரூ.50,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு 3 வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

The post உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; மதுக்கடை, பார்களில் கட்டாய வயது சோதனை: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Govt. ,NEW DELHI ,Union Government ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...