- தேவகவுடா ஏபரன்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- ஜனதா
- பருப்பு
- பிரஜ்வால் ரேவன்னா
- தேவே கவுடா
- Revanna
- கர்நாடக
- தின மலர்
புதுடெல்லி: கர்நாடகாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை ெசய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மே 31 அன்று கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை கடந்த அக்.21ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்க கேட்டும் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, சதீஷ்சந்திர சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ‘குற்றம் சாட்டப்பட்ட நபர் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், கர்நாடகா உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க முடியாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post பாலியல் பலாத்கார வழக்கு; தேவகவுடா ேபரனுக்கு ஜாமீன் மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.