புதுடெல்லி: மதமாற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ஜிஓ அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள், மத மாற்றம், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் போராட்டங்களைத் தூண்டுதல், பயங்கரவாதம் அல்லது தீவிர அமைப்புகளுடன் தொடர்பு உள்ள எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உாிமத்தையும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2010ன் கீழ் உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முடியும்.
அதே போல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதன் திட்டங்கள் அடிப்படையில் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றாலோ அல்லது வருடாந்திர வருமானத்தைப் பதிவேற்றவில்லை என்றாலோ பதிவு ரத்து செய்யப்படும். எனவே வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிதியை ஏற்க அனுமதிக்கப்படாது.
அதே போல் என்ஜிஓக்களில் உள்ள ஏதேனும் அலுவலகப் பொறுப்பாளர், உறுப்பினர், முக்கியப் பணியாளர்கள் உள்துறை அமைச்சகம் கேட்கும் விளக்கங்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும், தேவையான தகவல் அல்லது ஆவணங்களை வழங்காமல் இருந்தாலும் பதிவு ரத்து செய்யப்படலாம். ேமலும் கடைசி 6 நிதியாண்டுகளின் வருடாந்திர வருமானத்தை பதிவேற்றம் செய்யவில்லை, குறைந்தபட்ச தொகையான ரூ.15 லட்சத்தை செலவழிக்கும் அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை. கடைசி 3 நிதியாண்டுகளில் சமூக நலனுக்கான செயல்பாடுகளும் இல்லை என்றாலும் பதிவை ரத்து செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வெளிநாட்டு நிதி உதவி மூலம் மத மாற்றம் செய்தால் என்ஜிஓ உரிமம் ரத்து: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.