சாத்தூர் பகுதியில் பாலங்களில் வண்ணம் பூசும் பணி தீவிரம்

சாத்தூர், நவ12: சாத்தூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் உள்ள பாலங்கள், வேகத்தடைக்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விருதுநகர் கோட்டப்பொறியாளர் பாக்யலட்சுமி உத்தரவின் பேரில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைகளில் உள்ள பாலங்களை பராமரிப்பு செய்தல், வர்ணம் பூசுதல் போன்ற பணிகளும், சாலை பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளும் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மழை வெள்ளத்தால் ஏற்ப்படும் சாலை அரிப்பை சரிசெய்ய மணல் மூட்டைகளும், காற்றில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் மண்வெட்டி, தட்டு உள்ளிட்ட தளவாடச் சாமான்களும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள காலங்களில் சாலைகள் சேதமடைவதை தடுக்கவும், மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை மேற்கொள்ளவும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post சாத்தூர் பகுதியில் பாலங்களில் வண்ணம் பூசும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: