×

பென்ஷன் வாங்க குவிந்த முதியோர்

 

குன்னூர், நவ.12: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் வங்கி ஊழியர்கள் வீடு வீடாக சென்று முதியோர் உதவிதொகை வழங்கி வந்தனர். ஆனால் இந்த மாதம் அனைத்து முதியோர்களும் வங்கியில் வந்து கையொப்பமிட்டு உதவித்தொகை பெற்று செல்லுமாறு கூறியதையடுத்து, இதனால் முதியோர் பெரும் சிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று குன்னூரில், வங்கியில் தமிழக அரசு வழங்கும் முதியோர் வாங்குவதற்கு குன்னூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள முதியோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இதே போல் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆட்டோ பிடித்து, குன்னூர் வந்து முதியோர் உதவித்தொகை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவித்தனர். குறிப்பாக தங்களுக்கு கிடைக்கும் ரூ.1200 பணத்தில் ரூ.700 வரை ஆட்டோவிற்கு கொடுத்து வரும் சூழல் உள்ளதாகவும், நடக்க முடியாத சில முதியோர்கள் உதவித்தொகை கிடைக்காமல் சிரமமடைவதாக தெரிவித்தனர்.

The post பென்ஷன் வாங்க குவிந்த முதியோர் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Coonoor district ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே ஆபத்தை உணராமல் சரக்கு...