×

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

நாகர்கோவில், நவ.12: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன், நாகர்கோவில் – திருநெல்வேலி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பணகுடி பகுதியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இளநீர் ஏற்றிக்ெகாண்டு சென்ற டெம்போவை மறித்து அதிக லோடு எனக் கூறி a20,000 அபராதம் விதித்தனர். விளைபொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஓவர் லோடு என்ற பெயரில் அபராத விதிப்பு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கைவிட வேண்டும் என கோரி, பணகுடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று (11ம்தேதி) நாகர்கோவில் விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதற்காக விவசாயிகள் வேன்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்று காலை முதல் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் நேற்று காலை இந்த பிரச்சினை குறித்து சபாநாயகரை சந்தித்து முறையிட விவசாயிகள் சென்றதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டதாகவும் விவசாயிகள் கூறினர்.

The post விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : NAGARGO ,NAGARGO - ,TIRUNELVELI ,Panakudi ,Thiruvananthapuram ,Regional Transport Office ,
× RELATED கன்னியாகுமரியில் ‘ கடல் நீச்சல் குளம்...