×

நித்திரவிளை அருகே மாயமான சிறுவன் மொட்டை தலையுடன் மீட்பு

நித்திரவிளை, நவ. 12: புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி. இவர் தற்போது விரிவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராஜகுமாரி காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது 17 வயது மகன் கூட்டாலுமூடு பகுதியில் உள்ள ஒரு மார்ஜின் பீரி மார்க்கெட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த 8ம் தேதி திடீரென மாயமானான். இது சம்பந்தமாக ராஜகுமாரி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் திருவனந்தபுரம் பகுதியில் வேலைக்கு சென்றதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் மொட்டை தலையுடன் சுற்றி திரிந்த சிறுவனை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விட்டு, தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் நிலையம் சென்ற தாயார் வீட்டில் இருந்த போது தலையில் முடியுடன் இருந்த மகன், மொட்டை தலையுடன் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக மகனிடம் தாயார் கேட்ட போது மகன் பேசாமல் நின்றான். இதையடுத்து போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறி தாயாருடன் அனுப்பி வைத்தனர்.

The post நித்திரவிளை அருகே மாயமான சிறுவன் மொட்டை தலையுடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nithrivila ,Nithravila ,Rajakumari ,Marayapuram ,Pudukadai ,Virivila ,Kanchampuram ,Nithrivilai ,
× RELATED நித்திரவிளை அருகே நள்ளிரவில் தீ விபத்து