×

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ஆம்புலன்சில் வடமாநில கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, அந்த ஆம்புலன்சில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுனாராம் (37). இவரது மனைவி புதனி (35). இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் அடுத்த ஆரனேரி கிராமத்தில் வசித்து வருகின்றனர். சுனாராம் அதே பகுதியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புதனித்தாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது கணவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், ஆரனேரி கிராமத்திற்கு வந்த ஆம்புலன்சில் புதனியை அழைத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, செல்லும் வழியில் புதனிக்கு திடீரென பிரசவ வலி அதிகரிக்கவே, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் மணிகண்டன், பிரசவம் பார்த்துள்ளார். இதில், சுகப்பிரசவத்தில் புதனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Northern ,Sriperumbudur ,Sunaram ,Jharkhand ,Budhani ,Mambakkam ,
× RELATED அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின்...