×

நாகர்கோவிலில் ரீல்ஸ் வெளியிட்ட மாணவனுக்கு a4000 அபராதம்

நாகர்கோவில், நவ.12: நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் முக்கியமான சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி அதை ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் இந்த ரீல்ஸ் வைரலானது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் மேற்கண்ட மாணவர் மீது தற்போது போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக டிராபிக் போலீசார் வழக்கு பதிவு செய்து a4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். தொடர்ந்து, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post நாகர்கோவிலில் ரீல்ஸ் வெளியிட்ட மாணவனுக்கு a4000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Ramanputur ,District Superintendent of Police ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் சி.பி.எச் ரோட்டில் தோண்டிய சாலையை மூடாததால் விபத்து அபாயம்