×
Saravana Stores

அமெரிக்காவில் கின்னஸ் சாதனை: 3,50,000 குழந்தைகளுக்கு பெண் தாய்ப்பால் தானம்

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ (36) என்ற தாய், தனது இரக்க குணத்துக்கே அடையாளமாக திகழ்ந்துள்ளார். அவர் இதுவரை 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததின் மூலம் அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆரோக்கியமானதாக உருவாக்கி உள்ளார். இதுகுறித்து ‘கின்னஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், ‘பச்சிளங் குழந்தைகளின் மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவான தாய்ப்பாலை தொடர்ந்து அலிசா ஓக்லெட்ரீ வழங்கி வருகிறார். இவரது தாய்ப்பால் மூலம் 3,50,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் 1,569.79 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியிருந்தார். தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்து இதுவரை 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்’ என்று கூறினர்.

The post அமெரிக்காவில் கின்னஸ் சாதனை: 3,50,000 குழந்தைகளுக்கு பெண் தாய்ப்பால் தானம் appeared first on Dinakaran.

Tags : Texas ,Alisa Ogletree ,Texas, USA ,
× RELATED இதுவரை 3,50,000 குழந்தைகளுக்கு 2,646 லிட்டர்...