ஜெருசலேம்: காசா மீது தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்த ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து கடந்த செப்.16ம் தேதி லெபனான் மற்றும் சிரியா நாட்டில் ஹிஸ்புல்லா குழுவினர் வைத்திருந்த பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இந்த பீதி அடங்கும் முன் செப்.17ம் தேதி வாக்கி டாக்கி வெடித்து சிதறியது. இந்த அதிரடி தாக்குதலில் 39 பேர் பலியானார்கள். 3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கும் என்று அனைவரும் நம்பினார்கள். தற்போது முதன்முறையாக பேஜர், வாக்கிடாக்கி வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் நாளிதழ் வெளியிட்ட செய்தியில்,’ இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் ஆகியோரின் எதிர்ப்பை மீறி ஹிஸ்புல்லாக்கள் மீது பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து தற்போது இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் அரசியலில் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட யோவ் கேலண்டை விட தான் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதை நாட்டிற்கு உணர்த்தவும், பிரதமர் நெதன்யாகு இந்த தகவலை வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
The post பேஜர், வாக்கி டாக்கி வெடிக்க நாங்கதான் காரணம்: இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல் appeared first on Dinakaran.