×
Saravana Stores

இலங்கையில் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்

கொழும்பு: இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயக (56) அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 14ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த தேர்தல் மூலம் இலங்கையின் புதிய பிரதமர் யார்? என்பது தெரிந்துவிடும். 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, அதிபர் அனுர குமார திசநாயகவின் கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post இலங்கையில் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Anura Kumara Dissanayake ,National People's Power ,NPP ,14th parliamentary election ,Dinakaran ,
× RELATED இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்:...