×

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி 20: பொளந்து கட்டிய பட்லர் இங்கிலாந்து அபார வெற்றி

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். கேப்டன் ரோவ்மன் பாவல் சற்று நிதானமாக ஆடி 41 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ராஸ்டன் சேஸ் 13 ரன், ரொமாரியோ ஷெப்பர்ட் 22 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து பவுலிங்கில் லிவிங்ஸ்டன், டான் மௌஸ்லி, சாகிப் மஹ்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணைந்து அதிரடியில் இறங்கினர். வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் ஜோஸ் பட்லர் பவுன்டரி, சிக்ஸ் என விளாசினார். லிவிங்ஸ்டன் 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 8 பவுன்டரி, 6 சிக்சர்கள் அடித்து 83 ரன்கள் சேர்த்து 13வது ஓவரில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன ஜோஸ் பட்லர் அதற்கு பழிதீர்க்கும் வகையில் 6 சிக்ஸ் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க 3வது போட்டி 14ம்தேதி நடைபெற உள்ளது.

The post வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி 20: பொளந்து கட்டிய பட்லர் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : 2nd T20I ,West Indies ,Buttler ,England ,Barbados ,
× RELATED வெ.இ.யை ஒயிட் வாஷ் செய்து இந்திய மகளிர் கெத்து! 3வது ஓடிஐயிலும் அமோக வெற்றி