இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் :அதிபர் அநுரகுமார திசநாயக்க உறுதி

கொழும்பு : இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க ஆற்றிய உரையில், ” இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும். இதனால் இலங்கையின் கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இலங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

மாநில அரசுகளால் அபகரிக்கப்பட்டு, இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வவருகின்றனர். மாகாண மற்றும் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கப்படும்.”இவ்வாறு பேசினார்.

The post இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் :அதிபர் அநுரகுமார திசநாயக்க உறுதி appeared first on Dinakaran.

Related Stories: