×

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கடை உரிமையாளர், பெண் போக்சோவில் கைது

ஆரணி, நவ.11: ஆரணியில் சாக்லேட் தருவதாக கூறி அழைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, கடை உரிமையாளர் மற்றும் பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனை சேர்ந்தவர் ஓட்டலில் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் ஆரணியில் வசித்து வருகிறார். இவரது 13 வயது மகள் ஆரணி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் நின்று சிறுமி தினமும் பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர், மாலை பள்ளி வேனில் வந்து ஆரணி காஜிவாடை பகுதியில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அதே பகுதியில் மண்ணெண்ணெய் கடை வைத்துள்ள ஜனார்தனன்(55) என்பவரது வீட்டில் வேலை செய்யும் ராஜேஸ்வரி(57) அந்த சிறுமியிடம் சென்று ஜனார்தனன் கடைக்கு சென்றால், உனக்கு பிஸ்கட், சாக்லேட் தருவார் என கூறினாராம். இதனால் அந்த சிறுமி ஜனார்தனன் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கடையின் வெளியில் சிறுமிக்காக காத்திருந்த ஜனார்த்தனன் சிறுமி வந்ததும் அவருக்கு சாக்லேட் தருவதாக கூறி கடையின் உள்ளே அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, ஜனார்தனன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கடை உரிமையாளர் ஜனார்தனன், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜனார்தனனை வேலூர் மத்திய சிறையிலும், ராஜேஸ்வரியை பெண்கள் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

The post 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கடை உரிமையாளர், பெண் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso Arani ,Arani ,Thiruvannamalai District ,Arani Town ,Pocso ,
× RELATED ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு