×

ஊட்டி நகர திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள் கூட்டம்

 

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி நகர திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தென்றல் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாக முகவர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் ஆணைக்கேற்ப 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை எட்டும் வகையில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி மற்றும் நகர கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி நகர திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty City DMK Executives ,Ooty ,Nilgiri district ,Ooty city DMK ,DMK ,City Secretary ,George ,District Deputy Secretary ,Ravikumar ,Chief Executive Committee ,
× RELATED கேரட் பயிரை நோய் தாக்காமல் இருக்க...