×

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

 

கோவை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 1.01.2024 ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளும் பணி நடந்தது. கடந்த 29.10.2024 தேதி 28.11.2024 தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. அனைத்து அரசு வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பான விண்ணப்ப படிவங்களை தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் பொறுப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திரும்ப ஒப்படை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16 மற்றும் 17ம் தேதி, 23 மற்றும் 24ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 01.01.2025 ம் தேதியன்று 18 வயதினை நிறைவு செய்யும் வாக்காளர்கள் மற்றும் இதர பொதுமக்கள் அனைவரும் மேற்காணும் வாய்ப்பினை பயன்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Election Commission ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முழு...