2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருவதால், மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் வாய்ப்புள்ளது. அது அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழக-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. இது தவிர 13ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

14ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். வெப்பநிலை 95 டிகிரியாக இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார்வளைகுடா, மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை வீசும்.

* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 13ம் தேதியும், 15ம் தேதியும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
* தமிழகத்தில் மன்னார்வளைகுடா, அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post 2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை appeared first on Dinakaran.

Related Stories: