- மகாராஷ்டிரா
- காங்கிரஸ்
- மும்பை
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- என்சிஎஸ்
- உத்தவ் பாலாசாகேப் தாக்கரே
- சிவசேனா
- மகா விகாஸ் அகாதி
- மல்லிகார்ஜுனா கார்கே
- தின மலர்
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா ஆகியவை மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மும்பையில் வெளியிட்டார். அப்போது உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: பெண்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். 9 வயது முதல் 16 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் 2 நாட்கள் விருப்ப விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படும். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ரூ.500 விலையில் ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். 18 வயதை எட்டும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ரூ.3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
* மதமாற்ற தடை சட்டம் இலவச ரேஷன் பொருட்கள்பாஜ தேர்தல் அறிக்கையில் உறுதி
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, 25 அம்சங்கள் கொண்ட சங்கல்ப் பத்ரா என்ற பாஜ தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு: மகாராஷ்டிராவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும். தொழில்துறைக்கு தேவையான பயிற்சிக்கான திறன் கணக்கெடுப்பு நடத்தப்படும். அக்ஷய் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும்.
லட்கி பகின் திட்டத்தில் நிதியுதவி ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். மாநிலத்தை மேம்பட்ட ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி மையமாக மேம்படுத்தவும் பாஜ திட்டமிட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். 2027ம் ஆண்டுக்குள் 50 லட்சம் லட்சாதிபதி பெண்கள் உருவாக்கப்படுவார்கள். உரத்திற்கான மாநில ஜிஎஸ்டி விவசாயிகளுக்கு மானியமாக திருப்பித் தரப்படும் என உறுதி அளித்துள்ளது.
The post மகாராஷ்டிராவில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கை appeared first on Dinakaran.