பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி? எடப்பாடி சூசகம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது முதல்வர் வைத்த விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘முதல்வர் என் மீது வைக்கப்பட்ட விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல’ என்று எடப்பாடி தெரிவித்தார். தொடர்ந்து, உங்கள் கூட்டணிக்கு பாஜவையும் பாமகவையும் வரவேற்க கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு எடப்பாடி, “கதவை திறந்து வைப்பது, மூடி வைப்பது என்பதெல்லாம் அதிமுகவில் கிடையாது. மற்ற கட்சிகளில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எங்கள் கட்சியின் கொள்கை அடிப்படையில் யார் விருப்பப்பட்டு சேருகிறார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சிகள்தான். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி என்பது முடிவாகும். அதற்கு முன்பு எது சொன்னாலும் அவையெல்லாம் தேர்தல் வரை நிற்காது’’ என்றார்.

பாஜவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பாஜவை விமர்சித்து வந்த எடப்பாடி, சமீபத்தில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அதனால் பாஜ, நடிகர் விஜய் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி அறிவுறுத்தி இருந்தார். தற்போது பாஜவுடன் கூட்டணி வைக்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு இல்லை என்று சொல்லாமல் கூட்டணிக்கு ரெடி என்பதை மறைமுக கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி? எடப்பாடி சூசகம் appeared first on Dinakaran.

Related Stories: