அந்த உத்தரவின் படி சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள ஸ்பா நிலையங்களில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். அதன்படி திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகர் 5வது பிரதான சாலையில் உள்ள ஒரு ஸ்பா நிலையத்தில் மசாஜ் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு-2 இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட ஸ்பா நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சிவகாங்கை மாவட்டம் மேலையூர் அருகே உள்ள தொண்டையூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்(31) என்பவர் சட்டவிரோதமாக ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம் பெண்கள் மீட்டனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருவான்மியூரில் ஸ்பா நிலையத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது appeared first on Dinakaran.