×

கோவையில் நாளை `மக்களை தேடி’ சிறப்பு முகாம்

கோவை, நவ. 10: ேகாவை மாநகராட்சி சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான `மக்களை தேடி’ சிறப்பு முகாம் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10வது வார்டு சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை எஸ்.எம்.எஸ். மஹாலில் நாளை (திங்கள்) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். இம்முகாமில், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

எனவே, “பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் தொடர்பாகவும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். இம்முகாம், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெறும்’’ என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

The post கோவையில் நாளை `மக்களை தேடி’ சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ekavai Corporation ,Tamil Nadu ,Chief Minister ,10th Ward Saravanampatti-Kalapatti Road ,Mahal. Corporation ,Dinakaran ,
× RELATED கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இடமாற்றம்