×

பெரம்பலூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

பாடாலூர், நவ.10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பைக்கில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த வாலிபரை, பாடாலூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான குழுவினர் ரோந்து சென்ற போது விசாரித்தனர். அவரிடம் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து மேலும் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம், பாகாயம், சத்தியா நகரை சேர்ந்த வெங்கடேசன் மகள் பார்த்திபன் (20) என்பவது தெரிய வந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் பார்த்திபனை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுபோன்று யாரவது, கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பெரம்பலூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,BATALUR ,ALATHUR TALUKA BATALUR GOVERNMENT SECONDARY SCHOOL ,PERAMBALUR DISTRICT ,KAMALI Nair ,Dinakaran ,
× RELATED களவாடப்படும் கனிம வளம்...