- பாகிஸ்தான்
- ஜம்மு
- இந்தியா
- ஐ.நா.
- நியூயார்க்
- பாக்கிஸ்தான்
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பு குழு
நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கூறும் பொய்கள் உண்மைகளை மாற்றாது என்றும் பொய்களில் இருந்து பாகிஸ்தான் விலக வேண்டும் என்றும் ஐநாவில் இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இருக்கும் ஐக்கிய நாடுகளின் ராணுவ கண்காணிப்புக்குழு பற்றி நேற்று முன்தினம் நடந்த ஐநாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த விவாதத்தின்போது பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் ஜம்மு காஷ்மீர் குறித்து பேசினார். இதில் இந்தியாவில் இருந்து சென்றுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கலந்து கொண்டது. இந்த குழுவில் இடம்பெற்ற எம்பியும் பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளருமான சுதன்சு திரிவேதி இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து விவாதத்தில் பேசிய எம்பி சுதன்சு திரிவேதி, ‘‘பாகிஸ்தானின் கருத்துக்கள் ஐநாவின் ஆகஸ்ட் நிகழ்ச்சி நிரலில் இருந்து அவையை திசை திருப்பும்முயற்சியாகும். ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இருக்கிறது, இனியும் இருக்கும். ஜம்மு காஷ்மீர் மக்கள் சமீபத்தில் தங்களது ஜனநாயக மற்றும் தேர்தல் உரிமையை பயன்படுத்தி புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுபோன்ற சொல்லாட்சிகள் மற்றும் பொய்களில் இருந்து பாகிஸ்தான் விலகி இருக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தான் கூறும் பொய்கள் உண்மைகளை மாற்றாது” என்றார்.
The post ஜம்மு காஷ்மீர் குறித்த பொய்களில் இருந்து பாக். விலக வேண்டும்: ஐநாவில் இந்தியா பதிலடி appeared first on Dinakaran.