×

ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம்

ஓசூர், நவ.10: ஓசூர் ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம், தொகுதி பார்வையாளர் வடிவேல் மேற்பார்வையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள், ஒன்றிய கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பாக முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Union DMK ,DMK ,Hosur Union ,Observer ,Vadivel ,Union ,President ,Nagaraj ,Union Secretary ,Gajendramurthy ,Dinakaran ,
× RELATED செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில்...