விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு எஸ்.ஏ. கல்லூரியின் சைக்கிள் பேரணி

திருவள்ளூர்: திருவேற்காடு, எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா உத்தரவின் பேரில் விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணியை நடத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார், இயக்குனர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை வகித்தனர். பேரணியை ஐஓசிஎல் நிர்வாக இயக்குனர் எம்.அண்ணாதுரை, விஜிலென்ஸ் பொது மேலாளர் சுரேஷ்குமார், முதன்மை பொது மேலாளர் வி.வெற்றி செல்வகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம், பனவேடு தோட்டம், அருணாச்சல நகர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம் உள்ளிட்ட கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் குழுவால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் வழியாக மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்றனர். இதில் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் சமூக ஈடுபாடு மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வண்ணம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

The post விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு எஸ்.ஏ. கல்லூரியின் சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: