பெங்களூரு: கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் விவசாயி ருத்ரப்பா கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது சொத்து பத்திரத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அதிர்ச்சியில் விவசாயி ருத்ரப்பா தற்கொலை செய்து கொண்டதாக பெங்களூரு தெற்கு தொகுதி மக்களவை உறுப்பினர் தேஜேஸ்வி சூர்யா, அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விவசாயி ருத்ரப்பா தற்கொலைக்கு கடன் தொல்லைதான் காரணம் என்று போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் விவசாயி ருத்ரப்பா தற்கொலை தொடர்பாக பொய் செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டி ஹாவேரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எம்பி தேஜேஸ்வி சூர்யா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மட்டுமில்லாமல் செய்தி வெளியிட்ட சமூகவலைதளங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post விவசாயி தற்கொலை தொடர்பாக பொய் தகவல் பரப்பியதாக கர்நாடகா பாஜ எம்பி மீது வழக்கு appeared first on Dinakaran.