×
Saravana Stores

ஏடிஎம் கார்டு மூலம்ரூ.32 ஆயிரம் மோசடி செய்தவருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சோகண்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அமுல்ராஜ் (41). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தன்னிடம் சென்ட்ரிங் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க, செங்கல்பட்டு அருகே மேலமையூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையின் ஏடிஎம் மையத்துக்கு அமுல்ராஜ் சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு வங்கி ஏடிஎம் மெஷினில் கார்டை வைத்து பணம் எடுக்கத் தெரியவில்லை. இதனால் அங்கு பணம் எடுக்க வந்த, தனக்கு அறிமுகம் இல்லாத மற்றொரு நபரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி அமுல்ராஜ் கூறியிருக்கிறார். அந்நபரும் அமுல்ராஜ் கேட்ட பணத்தை கார்டிலிருந்து எடுத்து கொடுத்திருக்கிறார். பின்னர் அமுல்ராஜின் வழிகாட்டலில், அப்பணத்தை வங்கி ஏடிஎம் மெஷின் மூலம் வேறொரு வங்கி கணக்குக்கு அந்நபர் மாற்றி அனுப்பி வைத்திருக்கிறார். எனினும், அமுல்ராஜின் ஏடிஎம் கார்டை அந்நபர் கொடுக்காமல், அதன் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, வேறொரு ஏடிஎம் மையத்தில் அந்நபர்ரூ.32 ஆயிரம் பணத்தை எடுத்து மோசடி செய்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து செல்போனில் குறுந்தகவல் வந்த பிறகுதான் அமுல்ராஜுக்கு தெரியவந்தது. இதுபற்றி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அமுல்ராஜ் புகார் அளித்தார். போலீசார் மர்ம நபரை சிசிடிவி காமிரா பதிவுகளின் மூலமாக தேடி வருகின்றனர்.

 

The post ஏடிஎம் கார்டு மூலம்ரூ.32 ஆயிரம் மோசடி செய்தவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : CHENGALPATTU ,SOKHANDI ,THIRUKKASHKULTANAM ,TALUKA ,Amulraj ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில்...