திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள அரசு அனுமதித்திருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று SETC பேருந்துகள் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற கேரள அரசு அனுமதி வழங்கியது. கேரள அரசின் அனுமதியால் தமிழக பக்தர்கள் 20 கி.மீ வரை கேரள பேருந்துகளில் அலைய வேண்டிய நிலை இனி இருக்காது. மண்டல பூஜை, மகர ஜோதியை முன்னிட்டு நவ.15 முதல் ஜன.16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
The post தமிழக அரசு பேருந்துகளுக்கு பம்பை வரை அனுமதி appeared first on Dinakaran.