பத்மநாபசுவாமி கோயிலில் நாளை ஆறாட்டு ஊர்வலம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பங்குனி மற்றும் ஐப்பசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட ஐப்பசி திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா இறுதி நாளான நாளை (9ம் தேதி) ஆறாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்படும். சங்குமுகம் கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும்.

இதனால் நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் கடந்த 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே ஆறாட்டு ஊர்வலம் தற்போது விமான நிலையத்தின் ஓடுபாதை உள்ள பகுதி வழியாகத்தான் சென்றது. எனவே பாரம்பரியமாக நடைபெறும் ஊர்வலத்தின் பாதையை மாற்ற வேண்டாம் என்பதற்காகவே ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது.

The post பத்மநாபசுவாமி கோயிலில் நாளை ஆறாட்டு ஊர்வலம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: