- வராகி
- சென்னை முதல்வர் அமர்வுகள் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
- கிருஷ்ணகுமார் (எ) வராக
- தின மலர்
சென்னை: பணம் மோசடி வழக்கில் போலி பத்திரிகையாளர் வாராகியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலி பத்திரிகையாளர் கிருஷ்ணகுமார் (எ) வாராகி, காஸ் ஏஜென்சி வாங்கி தருவதாகவும், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி இருவரிடம் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாராகியை அக்டோபர் 10ம் தேதி கைது செய்து அவர் மீது 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி வாராகி தாக்கல் செய்த மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, ‘‘வாராகி தான் பத்திரிகையில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது அடையாள அட்டை 2019லேயே காலாவதியாகிவிட்டது. அவர் சமூக வலைத்தளங்களில் அதிகாரிகளுக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டு மிரட்டும் நபராவார். ரூ.44 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்துள்ளார்.
அவர் வருமான வரியும் கட்டவில்லை. அவரிடம் இருந்து எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. எனவே, இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பின் இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் வாராகியின் 2 ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post வேலை வாங்கி தருவதாக பண மோசடி; போலி பத்திரிகையாளர் வாராகியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.