அசாமின் தர்ரங்காவில் இந்தியா – பூடான் முதல் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறப்பு


தர்ரங்கா: இந்தியா – பூடான் எல்லையில் முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி நேற்று திறக்கப்பட்டது. அசாமின் தமுல்பூர் மாவட்டத்தில் தர்ரங்கா சோதனைச் சாவடியை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு சோதனைச் சாவடியாக நிறுவி உள்ளது. சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள தர்ரங்கா சோதனைச் சாவடி வணிகம் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான முக்கிய போக்குவரத்து புள்ளியாக நீண்ட காலம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அசாம் அண்டை நாடுகளான பூடான் மற்றும் வங்கதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

இதையடுத்து முறையான குடியேற்ற சோதனைச் சாவடியை நிறுவுவது, எல்லை பாதுகாப்புகளை வலுப்படுத்துவது, குடியேற்றங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற இந்தியாவின் பரந்த மூலோபாயங்களுடன் ஒத்து போகிறது. இந்நிலையில் இந்தியா – பூடான் எல்லையில் இருந்து 700 கிமீ தொலைவில் 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தர்ரங்கா சோதனைச் சாவடியை அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.

இந்த சோதனைச் சாவடியில் அலுவலக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், சரக்குகள் ஏற்றுதல், இறக்குதல், எடைப்பாலம், கிடங்குகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளடங்கி உள்ளன.

The post அசாமின் தர்ரங்காவில் இந்தியா – பூடான் முதல் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: