- இந்தியா
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- புது தில்லி
- மத்திய உள்துறை அமைச்சர்
- யூனியன் அரசு
- பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு -2024
- தில்லி
- தேசிய புலனாய்வு அமைப்பு
புதுடெல்லி: தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் 2 நாள் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு-2024 நேற்று தொடங்கியது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது, சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், தீவிரவாதத்துக்கு எந்த பிராந்திய எல்லையும் இல்லை.
எனவே தீவிரவாதத்துக்கு எதிராக மாநில மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கூட்டு உத்திகளை உருவாக்கி உளவுத்துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான உறுதியான கொள்கையுடன் நாடு முன்னேறி வருகின்றது. தீவிரவாதத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது” என்றார்.
The post தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.