×

வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: ஐநா சபை கூட்டத்தில் திருச்சி சிவா உரை

வாஷிங்டன்: வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக ஐநா சபை கூட்டத்தில் உரையாற்றிய மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஐநா சபையின் 79வது பொதுசபை கூட்டத்தை தொடர்ந்து 12 உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு சென்றுள்ளது.

வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐநா சபையின் சமூக மற்றும் பொருளாதாரத்திற்கான அறிக்கை குறித்த அமர்வில் பங்கேற்று இந்தியா சார்பில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா உரை ஆற்றினார்.

அப்போது அவர் இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். உலகமே ஒரே குடும்பம் தான் என்று கூறிய அவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக இந்திய நாடாளுமன்ற குழுவினர் ஐநா சபை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் இந்தியாவிற்கும் ஐநா சபைக்கும் இடையிலான நெருக்கமான நல்லுறவு குறித்த பல்வேறு அமர்வுகளிலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு சிறப்பு அமர்வுகளில் உரையாற்றி வருகின்றனர்.

 

The post வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: ஐநா சபை கூட்டத்தில் திருச்சி சிவா உரை appeared first on Dinakaran.

Tags : India ,Trichy Siva ,UN General Assembly ,Washington ,Rajya Sabha ,DMK ,UN ,Assembly ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு...