தொடர்ந்து 2வது பாதியிலும் ஒருங்கிணைந்து விளையாடிய கேரள அணிக்கு 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் விஜூ தேஸ்வின் கோலடித்து அசத்தினார். பதில் கோல் அடிக்க ஜம்மு காஷ்மீர் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை கேரள கோல்கீப்பர் அருண் துடிப்புடன் செயல்பட்டு முறியடித்தார். கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மோகித் குஷ்வா கோலாக மாற்ற, கேரளா 4-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரை வீழ்த்தியது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள கேரளா முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்தது.
புதுச்சேரி கோல் மழை
இ பிரிவில் புதுச்சேரி – அருணாச்சல் அணிகள் மோதின. வீரத்தமிழன் தலைமையிலான புதுச்சேரி அணிக்கு 5வது நிமிடத்திலேயே எஸ்.சூர்யா முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன் பிறகு ஏ.தமிழரசன் (22வது நிமிடம்), மின்ஸ் ரஜத் (28வது நிமிடம்), டி அருண்குமார் (30வது நிமிடம்) அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். முதல் பாதி ஆட்ட முடிவில் புதுச்சேரி 4-0 என வலுவான முன்னிலையில் இருந்தது. 2வது பாதியில் டி.அருண்குமார் (42வது நிமிடம்), ஆர்.ரஞ்சித் (50, 55வது நிமிடம்) கோல் மழை பொழிந்தனர். விஜயகுமார் யாதவ் தலைமையிலான அருணாச்சல பிரதேச அணி 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்ட நேர முடிவில் புதுச்சேரி 7-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அருணாச்சல பிரதேசத்திடம் தோற்றதேயில்லை என்ற பெருமையையும் புதுச்சேரி தக்கவைத்துக்கொண்டது.
The post அகில இந்திய ஹாக்கி: கேரளா அபார வெற்றி appeared first on Dinakaran.