‘திருச்சியில் மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் 2ம் உலக போரில் பயன்படுத்தியது’

திருச்சி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில் வடதீர்த்த நாதர் கோயில் அருகே காவிரி படித்துறையில் கடந்த 30ம் தேதி மாலை 60 மீ. நீளமும், 3.885 கிலோ எடையும் உள்ள ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டது. பள்ளம் தோண்டி வெடிக்க வைத்து ராக்கெட் லாஞ்சரை ராணுவ அதிகாரிகள் செயலிழக்க செய்தனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இது 1953ம் ஆண்டு கொரியப் போரில் பயன்படுத்திய `பசுக்கா’ என்ற ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்களில் பயன்படுத்தப்பட்ட ஷெல்களின் டம்மி.

இந்த `பசுக்கா’ ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்கள் பீரங்கி, டாங்கிகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுகின்றன. 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ராக்கெட் லாஞ்சர் எப்படி இங்கு வந்தது என விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

The post ‘திருச்சியில் மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் 2ம் உலக போரில் பயன்படுத்தியது’ appeared first on Dinakaran.

Related Stories: