- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
- தின மலர்
சென்னை: சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து வரும் 16ம் தேதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைக் கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் காசிராஜன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறையில் ஆய்வு செய்து பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பார் கவுன்சில் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், லா அசோஷியேஷன் தலைவர் செல்வராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் எம்.பாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், டிஐஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி, உள்துறையை சேர்ந்த அதிகாரி, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பரிந்துரைக்கும் நபர் மற்றும் சட்டப்பணிகள் ஆணையக்குழுவை சேர்ந்த நபரும் குழுவில் இடம் பெறுவார்கள் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த குழு வரும் 16ம் தேதி சிறையில் ஆய்வு செய்து 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குழுவின் பரிந்துரைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post சிறை கைதிகளை சந்திக்கும் விவகாரம்; வழக்கறிஞர்களுக்கான வசதியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.