×
Saravana Stores

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக புழல், செங்குன்றம், சோழவரம், அலமாதி, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் தெற்கு வ ங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருக்கிறது.

அதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் 15 மாவட்டங்்களிலும், கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, 7மற்றும் 8ம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

The post 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,North East ,Monsoon ,Tamil Nadu ,Chengalpattu ,Villupuram ,Cuddalore ,Puducherry ,
× RELATED மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை...