கேரளாவில் உள்ள தேக்கடி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை செல்லும் வனப்பகுதியை ஒட்டி பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி, காட்டுமாடு, மான், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், குமுளி மலைச்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையின் இருபுறமும் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான குரங்குகள் தங்களது வனவாழ்வியலை மறந்து வாகன ஓட்டிகளை எதிர்பார்க்கும் நிலையில் திரிகின்றன.
மேலும், வாகன ஓட்டிகள் வீசும் உணவு எடுப்பதற்காக செல்லும் குரங்குகள் வாகன விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் பைகளில் வைத்து உணவை வீசுவதால், அவற்றை தின்னும் வனவிலங்குகளுக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளில் வனவிலங்குகளுக்கு உணவளிப்பதை தடுக்க வேண்டும். சாலையில் இருபுறமும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாகன ஓட்டிகள் அளிக்கும் உணவுகளால் குமுளி மலைச்சாலையில் குரங்குகள் குஷி: பிளாஸ்டிக் பைகளில் வீசுவதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து appeared first on Dinakaran.